ஒகேனக்கல்லில் விலங்குகள் சரணாலயம்அமைக்க அரசுக்கு கோரிக்கை
ஒகேனக்கல்லில் விலங்குகள் சரணாலயம்அமைக்க அரசுக்கு கோரிக்கைஒகேனக்கல், :ஒகேனக்கல் வனப்பகுதியில், விலங்குகள் சரணாலயம் அமைக்க, சுற்றுலா பயணிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒகேனக்கல், தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏரளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்கின்றனர். மேலும் முதலை பண்ணை, வண்ண மீன்கள் அருங்காட்சியகம் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க, தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.ஒகேனக்கல் வனப்பகுதி மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு யானை, மான், முயல், மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளும் உள்ளன. இதன் நலன் காக்கும் வகையிலும், ஒகேனக்கல் வனப்பகுதியில் விலங்குகள் சரணாலயம் அமைக்க வேண்டும். இவ்வாறு விலங்குகள் சரணாலயம் அமைந்தால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் ஒகேனக்கல் வளர்ச்சி அடையும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் இது வழிவகுக்கும். எனவே, இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதியும், வன விலங்குகளின் நலன் கருதியும், விலங்குகள் சரணாலயம் அமைக்க, சுற்றுலா பயணிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.