உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆட்சிமொழி கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு

ஆட்சிமொழி கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு

ஆட்சிமொழி கருத்தரங்கில் பங்கேற்க அழைப்புதர்மபுரி:தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு அலுவலகங்களில், ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடக்க துணைபுரியும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடப்பு, 2024 - 25ம் ஆண்டிற்கு வரும் பிப்., 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இந்த பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது. தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:45 வரை இக்கூட்டம் நடக்கும். இதில் பங்கேற்கும் நபர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படும். எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து துறை, வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களிலிருந்து கண்காணிப்பாளர் அல்லது உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் என அனைவரும் பங்கேற்கலாம். இதில், ஆட்சிமொழி திட்டத்தின் முக்கியத்துவம், திட்ட செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே ஒப்பம், சுருக்கொப்பமிட வேண்டும் என்பது முதல், அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழி திட்ட அரசாணைகள் மற்றும் பட்டறிவும் எடுத்துரைக்கப்படும். எனவே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் இந்த ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை