பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரானகுற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணிஅரூர்:தர்மபுரி மாவட்ட காவல்துறை மற்றும் எருமியாம்பட்டி இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்கள் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, குற்ற சம்பவங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் தலைமை வகித்தார். அரூர் சிறு விளையாட்டு அரங்கில் துவங்கிய பேரணியை, தர்மபுரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் இ.ஆர்.கே., கல்லுாரி மாணவியர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை கண்டறிவது, தடுப்பது, அதற்கான விழிப்புணர்வு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். நான்கு ரோடு, ரவுண்டானா, போலீஸ் ஸ்டேஷன் வழியாக சென்ற ஊர்வலம், அரூர் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. இதில், டி.எஸ்.பி.,க்கள் ராமமூர்த்தி, ராஜசுந்தரம், இன்ஸ்பெக்டர் லட்சுமி, இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தலைவர் செல்வராஜ், நிர்வாக இயக்குனர் சோழவேந்தன், கல்லுாரி முதல்வர் சக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.