உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவேரி மருத்துவமனை, ஓசூர் இன்டஸ்டிரியல் அசோசியேஷன் சார்பில், ஓசூரை பசுமையாக்கும் வகையில், ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், ஓசூர் இன்டஸ்டிரியல் அசோசியேஷன் வளாகத்தில் நேற்று மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். அடுத்த, 45 நாட்களில் தொழிற்சாலைகள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்களுக்கு வனத்துறை மூலம், மரக்கன்று இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதே வளாகத்தில், தமிழக போலீஸ் டிராபிக் வார்டன் அமைப்பு சார்பில், வருடாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கடந்த ஓராண்டில் டிராபிக் வார்டன்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !