மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
16 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
16 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
16 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில், ஏ.ஆர்.டி., சிகிச்சைக்கு வரும் எய்ட்ஸ் நோயாளிகளில், விடுபட்டவர்களுக்கும், புதியதாக பதிவு செய்தவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும், எய்ட்ஸ் நோயாளிகள் ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள, மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளுக்கு வந்து செல்லும் வகையில், மாதத்துக்கு இரு முறை இலவசமாக பஸ்களில் பயணம் செய்ய எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை, கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.புதியதாக பதிவு செய்த எய்ட்ஸ் நோயாளிகளுக்கும், ஏற்கனவே பதிவு செய்த நோயாளிகளுக்கும் முழுமையாக இலவச பஸ் பாஸ் வழங்கப்படாமல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பாஸ் வழங்கப்பட்டது. இதில், நூற்றும் அதிகமானவர்களுக்கு பாஸ் வழங்கப்படாமல் விடுபட்டது.இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, மாதந்தோறும் மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏ.ஆர்.டி., சிகிச்சை பெற நோயாளிகள் வருதற்கு சிரமப்படுன்றனர்.அவசர சிகிச்சை பெறுபவர்கள், அடிக்கடி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி வருவதற்கு பயண செலவு இல்லாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். மாவட்டத்தில், 1,731 ஆண்கள், 1,879 பெண்கள், நான்கு அரவாணிகள், 123 ஆண் குழந்தைகள், 122 பெண் குழந்தைகள் என மொத்தம், 3,859 பேர் ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை பெறுகின்றனர்.இவர்களில், 105 பேர் தாலுகா மருத்துவமனைகளில் ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். சமூக பொருளாதார வளர்ச்சியில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், எய்ட்ஸ் நோயாளிகள் இலவச பஸ் பயண அட்டையை பயன்படுத்தி ஏ.ஆர்.டி., சிகிச்சையை முறையாக பெறவேண்டும் என்பதற்காகவும், மாதம் இரு முறை தங்களின் சி.டி.4., அணுக்களை சோதனை செய்வதற்காக, மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு வரவேண்டும் என்பதற்காக அரசு செயல்படுத்திய திட்டத்தை, தொடர்ந்து முறைப்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
01-Oct-2025