தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தீர்மானம்
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தீர்மானம்தர்மபுரி, :தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின், மாநில செயற்குழு கூட்டம் தர்மபுரியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மாயாமலை கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, தி.மு.க., அரசு சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண், 311ன் படி, முறையான ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஈமச்சடங்கு நிதி, 25,000 ரூபாய் வழங்க வேண்டும். காப்பீடு திட்டம் வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.