மேலும் செய்திகள்
காவிரியாற்றில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
24-Feb-2025
ஒகேனக்கல் காவிரியாற்றில்மூழ்கிய பள்ளி மாணவி பலிஒகேனக்கல்:தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பி.மோட்டுபட்டியை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் மேனிகா, 17. இவர், கிருஷ்னாபுரம் அரசு பள்ளியில், 12ம் வகுப்பு படித்து வந்தார். தன் உறவினர் ஈமச்சடங்கு காரியத்திற்காக நேற்று, ஒகேனக்கலுக்கு தனியார் பஸ்ஸில் வந்துள்ளனர். அப்போது, மதியம், 2 மணியளவில், ஊட்டமலை பரிசல் துறை அருகே காவிரியாற்றில் பெற்றோருடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக காவிரியாற்றில் மூழ்கினார். ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பரிசல் ஓட்டிகளின் உதவியோடு, மேனிகாவை சடலமாக அதே பகுதியில் மீட்டனர். இதுகுறித்து, ஒகேனக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
24-Feb-2025