உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வரட்டாறு தடுப்பணை நீர்மட்டம்; தொடர்மழையால் அதிகரிப்பு

வரட்டாறு தடுப்பணை நீர்மட்டம்; தொடர்மழையால் அதிகரிப்பு

அரூர் : ர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, சித்தேரி மலையிலிருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால் தாதரவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். கடந்த, 17ல் தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.5 அடியில், 21 அடிக்கு தண்ணீர் இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பரவலாக பெய்த தொடர் கனமழையால் வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து வரத் துவங்கியது. இதனால், தடுப்பணை நீர்மட்டம் வேகமாக உயர துவங்கியது. நேற்று காலை நிலவரப்படி, 29 அடிக்கு தண்ணீர் உள்ளது. மழை நின்றதால், தடுப்பணைக்கு நீர்வரத்து இல்லை என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை