அரவை இயந்திரத்தில்சிக்கிய பெண் உயிரிழப்பு
அரவை இயந்திரத்தில்சிக்கிய பெண் உயிரிழப்புபென்னாகரம்: பென்னாகரம் அடுத்த நாய்க்கனுாரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் மனைவி ஜெயக்கொடி, 46. இவர்களுக்கு, 2 மகன்கள். ஜெயக்கொடி தன் தாய் வீடான பொச்சாரம்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு நேற்று முன்தினம் மாலை, இயந்திரம் மூலம் துவரை அடிக்கும் பணி செய்துள்ளனர். அப்போது, துவரை செடியை எடுத்து இயந்திரத்தில் வைக்கும்போது, தவறுதலாக அதில் புடவை மாட்டி, இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு படுகாயம் அடைந்து பலியானார். பென்னாகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.