மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்தர்மபுரி:மும்மொழி கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் ஹிந்தியை திணித்து, மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்தம் செய்யும் மத்திய, பா.ஜ., அரசை கண்டித்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று தர்மபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன் தலைமை வகித்தார். வி.சி., மாநில முற்போக்கு மாணவர் கழக துணை செயலாளர் பெருமாள், எஸ்.எப்.ஐ., மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மத்திய, பா.ஜ., அரசு மும்மொழி கொள்கை என்ற பெயரில், மீண்டும் ஹிந்தியை திணிக்க எடுக்கும் நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பேசினர்.