உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரயில் மோதி விவசாயி பலி

ரயில் மோதி விவசாயி பலி

ரயில் மோதி விவசாயி பலிபாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பரமசிவம், 50. இவர் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு வாழைத்தோட்டம் அருகே உள்ள, செங்கோடப்பட்டி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த தர்மபுரி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ