உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சமையல் காஸ் சிலிண்டர்திருடியவர் சிக்கினார்

சமையல் காஸ் சிலிண்டர்திருடியவர் சிக்கினார்

சமையல் காஸ் சிலிண்டர்திருடியவர் சிக்கினார்அரூர்:அரூரில் கடந்த, ஒரு மாதமாக பகல் நேரத்தில் வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர்கள் திருடப்பட்டு வந்தன. கடந்த, 5ல் எல்லப்புடையாம்பட்டியை சேர்ந்த பிரியா என்பவரது வீட்டில் இருந்து, 2 பவுன் தங்க நகை மற்றும் காஸ் சிலிண்டர் திருடு போனது. இது குறித்து அரூர் போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, தனிநபர் ஒருவர் பைக்கில் காஸ் சிலிண்டரை எடுத்துச் செல்வது தெரிந்தது. காஸ் சிலிண்டரை திருடியதாக வேப்பம்பட்டி மல்லுாத்தை சேர்ந்த செல்வம், 40, என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 13 காஸ் சிலிண்டர்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ