உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்

வனத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்

வனத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்பாப்பிரெட்டிப்பட்டி:--தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி.பள்ளிபட்டி அடுத்த சேர்வராயன் மலை தொடரில், ஏற்காடு பின்புறம், மங்களம் கல் காப்புக்காடு அமைந்துள்ளது.இங்கு காட்டெருமை, மான், மயில், உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த காப்புக்காட்டு பகுதி, ஆனை மேடு பகுதி வழியாக, ஏற்காடு மலை கிராமங்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதி மக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். நேற்று மதியம் காப்புக்காட்டு பகுதியில், திடீரென தீப்பிடித்தது.தகவலின்படி, பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன் மலை வடக்கு வனச்சரக அலுவலர் பழனிவேல் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் சம்பவ இடம் சென்றனர். அங்கு வனத்தில் பற்றிய தீயை வன தீத்தடுப்பு அலுவலர்கள் அணைத்தனர். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு வீரர்களும் வந்து, தீயை அணைக்க உதவினர். இருந்த போதிலும் தீ மள மளவென பற்றியதால், 15 ஹெக்டேர் பரப்பளவு உள்ள கல்காப்புக்காட்டில், 4 ஹெக்டேர் அளவிற்கு புல் பூண்டுகள், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின.வனவர் உதயகுமார், வனக்காப்பாளர்கள் பிரசாந்த் வனக்காப்பாளர்கள் பிரபு, ராஜா, முருகன் உள்ளிட்டோர், தீ தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 'வெயில் காரணமாக தீ பிடிக்க இப் பகுதியில் வாய்ப்பு இல்லை. வனப்பகுதிக்குள் சென்ற மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்திருக்கலாம் அல்லது புகைப்பிடிப்பவர்கள் செய்திருக்கலாம். அவர்கள் யாரென விசாரணை மேற்கொண்டுள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ