காரில் கடத்திய ரூ.2.80 லட்சம்மதிப்பிலான குட்கா பறிமுதல்
காரில் கடத்திய ரூ.2.80 லட்சம்மதிப்பிலான குட்கா பறிமுதல்பெரும்பாலை:பென்னாகரம் அடுத்த, பெரும்பாலை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஜவகர்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு பெரும்பாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தியபோது, அதன் டிரைவர் தப்பினார். காரை சோதனை செய்தபோது, அதில், 2.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 520 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதில், காருடன் சேர்த்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, தப்பிய டிரைவரை பெரும்பாலை போலீசார் தேடி வருகின்றனர்.