உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க பா.ஜ., வலியுறுத்தல்

ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க பா.ஜ., வலியுறுத்தல்

அரூர்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட, அரூர் பகுதிக்கு வெள்ள நிவா-ரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க வேண்டும்.இது குறித்து, பா.ஜ., தர்மபுரி மாவட்ட பட்டியல் அணி செயலர் முருகன், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி-யிருப்பதாவது:தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணையாறு, வாணியாறு மற்றும் வரட்டாறு பகுதி-களில் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, தமிழக முதல்வர் அரூர் வட்டாரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் அட்-டைக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு கூறி-யுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி