வி.சி., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அரூர்: உலக மகளிர் தினத்தையொட்டி, வரும், 29ல், திருவண்ணாம-லையில், வி.சி., கட்சியின் மகளிர் மாநாடு நடக்கவுள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று அரூரில் நடந்தது. இதில், தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., செயலாளர் சாக்கன் சர்மா பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் சாக்கம்மாள், கேசவன், தீரன் தீர்த்தகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.