உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மேலாண்மை துறை சார்பாக, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. இதில், மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.இயக்குனர் (பொ)மோகனசுந்தரம் தலைமை வகித்தார். ஓசூர் எம்.எச்.ஆர்.டி., தலைவர் புவனேஷ் குமார் மற்றும் யுனோ மிண்டா குழும துணை மேலாளர் ராஜேஷ் குமார், மாணவர்-களை ஊக்குவித்து பேசினர். கவுரவ விரைவுரையாளர் முகமத் நபி நன்றி தெரிவித்தார். 2ம் ஆண்டு மேலாண்மை துறை மாண-வர்கள் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.எய்ட்ஸ் விழிப்புணர்வு பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த தாளநத்தம் பஸ் நிறுத்-தத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று கலைக்குழு மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவில் உள்ள கிராமிய கலைஞர்கள், பால்வினை நோய் குறித்து, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் மூலம் விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். நிகழ்ச்சியில் பஞ்., தலைவர் பாப்பாத்தி பாலு, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ