உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தீயணைப்பு நிலையத்தில் மாணவர்கள் களப்பயணம்

தீயணைப்பு நிலையத்தில் மாணவர்கள் களப்பயணம்

அரூர்: அரூர் புனித அன்னை துவக்கப்பள்ளி மாணவர்கள், தீயணைப்பு நிலையத்தில் களப்பயணம் மேற்கொண்டனார்.பள்ளி தலைமை ஆசிரியர் குருஸ்மேரி தலைமையில், மாணவர்கள் அரூர் தீயணைப்பு நிலையத்துக்கு வந்து, தீயணைப்பு நிலைய செயல்பாடுகள், விபத்து மற்றும் தீ விபத்துக்கள் ஏற்படும் போது, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கும் முறை, விபத்து நடக்காமல் தடுப்பு முறை, விபத்து நடந்த பகுதிகளுக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் பணி குறித்தும் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் விரிவாக விளக்கம் அளித்தார். பின், 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்தும், அரூர் சார்வு நீதிமன்ற பணிகள் குறித்தும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆசிரியைகள் தெரசா, நீதியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை