வீணாகும் ஒகேனக்கல் குடிநீர்
வீணாகும் ஒகேனக்கல் குடிநீர்பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சியில், 15,000 மக்கள் வசிக்கின்றனர். இதில், வடசந்தையூர் கிராமத்தில் ஒகேனக்கல் குடிநீர் வழங்க, மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் மற்றும் வடசந்தையூர் உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் நடக்கிறது. இந்த குடிநீர் தொட்டியில் நேற்று மதியம், 12:00 மணியளவில் ஒகேனக்கல் குடிநீர் ஏற்றப்பட்டது. முழுமையாக ஏற்றப்பட்ட பின், அந்த குடிநீரை ஊராட்சி நிர்வாகம் நிறுத்தவில்லை.இதனால் தொட்டி நிரம்பி தொடர்ந்து பல மணி நேரம் ஒகேனக்கல் குடிநீர் வீணாகியது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை. அப்பகுதியில் உள்ள மக்கள் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து வீணாக சென்ற நீரில் தங்கள் கால்நடைகளை வெயிலுக்கு இதமாக குளிப்பாட்டினர். கோடை வறட்சி தொடங்கியுள்ள நிலையில், பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.