வாலிபர் உட்பட இருவர் மாயம்
வாலிபர் உட்பட இருவர் மாயம்தர்மபுரி:பென்னாகரம் அடுத்த பெரியதும்முகல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 25. இவர் மனைவி வசந்தி. இவர்களுக்கு மூன்று மாத குழந்தை உள்ளது. கடந்த, 23ல் பெரியசாமி மாயமானார். புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, ஆரல்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் மனைவி பிரியா, 28. இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். கடந்த, 4 அன்று பிரியா மாயமானார். புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.