உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டயர்கள் எரிப்பால் சுகாதார சீர்கேடு

டயர்கள் எரிப்பால் சுகாதார சீர்கேடு

டயர்கள் எரிப்பால் சுகாதார சீர்கேடு அரூர்:அரூரில் இருந்து, சேலம் செல்லும் பைபாஸ் சாலையில் நான்குரோடு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம் மற்றும் தனியார் திருமண மண்டபம் அருகே, பழைய லாரி டயர்களை எரிக்கின்றனர். இதிலிருந்து எழும்பும் கரும்புகை, சுற்றுவட்டாரத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், ஆங்காங்கே குப்பைக்கு தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால், குடியிருப்பு பகுதிகளில், புகை மூட்டம் அதிகளவில் ஏற்படுவதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள், சுவாச கோளாறு உள்ளவர்கள், நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, அப்பகுதியில் டயர்கள் மற்றும் குப்பையை எரிப்பதற்கு தடை விதிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை