உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போக்சோவில் கைதான டிரைவருக்கு 15 ஆண்டு

போக்சோவில் கைதான டிரைவருக்கு 15 ஆண்டு

போக்சோவில் கைதான டிரைவருக்கு '15 ஆண்டு'தர்மபுரி:போக்சோ வழக்கில் கைதானவருக்கு, 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.தர்மபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி அருகே வடகரையை சேர்ந்தவர் மாதேஷ், 32. இவர், 2019ல் தனியார் பள்ளி ஒன்றில் டிரைவராக பணியாற்றினார். அப்போது அப்பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, வடகரையில் இருக்கும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகார் படி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் மாதேஷை கைது செய்தனர்.தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட மாதேஷிற்கு, 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 15,000- ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி சிவஞானம் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை