உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டாஸ்மாக் சுவரில் ஸ்டிக்கர்பா.ஜ.,வினர் 8 பேர் கைது

டாஸ்மாக் சுவரில் ஸ்டிக்கர்பா.ஜ.,வினர் 8 பேர் கைது

டாஸ்மாக் சுவரில் ஸ்டிக்கர்பா.ஜ.,வினர் 8 பேர் கைதுஅரூர்:டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக, கடந்த, 17ல் சென்னையில் டாஸ்மாக் தலைமையகம் முற்றுகை போராட்டத்திற்கு சென்ற தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர், இனி தமிழகத்தில் காவல் துறையினரை துாங்கவே விட மாட்டோம், ஒவ்வொரு மதுபான கடை முன், மதுபான ஊழல் குறித்து, முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய போட்டோ ஒட்டப்படும் என, அறிவித்தார். அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்டம், அரூர் குரங்கு பள்ளத்திலுள்ள அரசு டாஸ்மாக் கடை சுவரில், 'போதையின் பாதையில் செல்லாதீர்கள் - அப்பா' என்ற வாசகத்துடன் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய ஸ்டிக்கர், பா.ஜ., சார்பில் ஒட்டப்பட்டது. இது குறித்து, அரூர் போலீசில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஜெயராமன் அளித்த புகார்படி, பா.ஜ.,வை சேர்ந்த நிர்வாகிகள் சரிதா, முருகன், பாலாஜி, அருணா, சித்ரா, ரூபன், கிருஷ்ணவேணி, சுகவனம் ஆகிய, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ