உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலக்கோடு, அரூரில் மழை

பாலக்கோடு, அரூரில் மழை

பாலக்கோடு, அரூரில் மழைபாலக்கோடு:பாலக்கோடு பகுதியில் நேற்று மாலை, 5:00 மணி மணிக்கு கனமழை பெய்தது. இதில், பாலக்கோடு தக்காளி மார்க்கெட் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் துார்வாராமல் இருந்ததமால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்றிரவு, 7:00 மணி முதல் சூறைக்காற்றுடன் பரவலாக சாரல் மழை பெய்தது. சூறைக்காற்று வீசியதால், அரூர் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மின்தடை ஏற்பட்டது. சாரல் மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி