உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மல்லிகா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காவேரி, மாவட்ட பொருளாளர் கருணாநிதி, மாவட்ட துணைத்தலைவர்கள் பாபு, சித்தன், மாவட்ட இணை செயலாளர்கள் சாரதாம்பாள், ராணி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். குறைந்தபட்ச மாத ஓய்வூதியம், 7,850 ரூபாய், அகவிலைப்படி, 55 சதவீதம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஈமச்சடங்கு தொகை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளிலேயே எஸ்.பி.எப்., ஜி.பி.எப்., தொகைகளை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதி காப்பாளர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை