உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பிளஸ் 1 பொதுத்தேர்வில் 360 மாணவர்கள் ஆப்சென்ட்

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 360 மாணவர்கள் ஆப்சென்ட்

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 360 மாணவர்கள் 'ஆப்சென்ட்'தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், நேற்று நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில், 360 மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆகினர். தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியது. இதில், தர்மபுரி மாவட்டத்தில், நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில், 103 அரசு பள்ளிகள், 4 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 3 அரசு உண்டு உறைவிடப்பள்ளி, ஒரு சமூக நலப்பள்ளி, 65 தனியார் பள்ளிகள் என, 177 பள்ளிகளை சேர்ந்த, 9,380 மாணவர்கள், 9,855 மாணவியர் என, 19,236 பேர் தேர்வெழுத இருந்தனர். மொத்தம், 83 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், 3,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படனர். இதில், 225 மாணவர்கள், 135 மாணவியர் என, 360 மாணவர்கள் தேர்வுக்கு, 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 18,876 பேர் தேர்வெழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை