உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து300 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து300 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்:தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக ஒகேனக்கல் உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும், ஒகேனக்கல்லின் இயற்கை அழகை கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த, ஒரு வாரமாக ஒகேனக்கல்லுக்கு, வரும் நீரின் அளவு வினாடிக்கு, 500 கன அடியாக இருந்தது. நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 300 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் நீரின்றி வறண்டு பாறைகளாகவும், ஆறு குட்டை போலவும் காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை