உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விலங்குகளை வேட்டையாட முயன்ற வாலிபருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

விலங்குகளை வேட்டையாட முயன்ற வாலிபருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

விலங்குகளை வேட்டையாட முயன்றவாலிபருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்அரூர், செப். 18-வனத்தில் துப்பாக்கியால் மான் வேட்டையாட முயன்ற வாலிபருக்கு வனத்துறையினர், 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.தர்மபுரி வனக்கோட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில், கடந்த, 15ல் இரவு, மொரப்பூர் வனச்சரகர் ஆனந்தகுமார் மற்றும் வனவர் விவேகானந்தன், வனக்காப்பாளர் கவுரப்பன் உள்ளிட்ட வனத்துறையினர், ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து வாலிபர் ஒருவர் பைக்கில் வெளியே வந்ததை பார்த்து, அவரை பிடித்து விசாரித்தனர். அவர், சேலம் மாவட்டம், கோவில்காடு பெருமாம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜி, 22, என்பதும், அவரும் வழியங்காடுவை சேர்ந்த பூபதி என்பவரும் டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் மான், காட்டுப்பன்றி வேட்டையாட கொளகம்பட்டி வனப்பகுதிக்கு வந்தது தெரிந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன், கோவிந்தராஜி ஆஜர்படுத்தப் பட்டார். அவருக்கு, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள பூபதியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !