உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

தர்மபுரி : ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி, தர்மபுரியில் உள்ள பல்-வேறு அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தர்மபுரி வெளிப்பேட்டை தெருவில் உள்ள அங்காளம்மன் கோவில் மூல-வருக்கு நேற்று பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் உள்-ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. பின், மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு அலங்-காரம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்-தனர்.கடகத்துார் பட்டாளம்மன், கொளகத்துார் பச்சையம்மன், செந்தில்-நகர் புத்து மாரியம்மன் கோவில், பாரதிபுரம் சாலை மாரியம்மன் கோவில், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், எஸ்.வி.,ரோடு அங்காளம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்-தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ