மேலும் செய்திகள்
மாணவியை மணந்த வாலிபர் மீது போக்சோ
12-Feb-2025
அரூர்: கடத்துாரில், மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, த.வெ.க., நகர பொறுப்பாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், கடத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுதாகர், 45. இவர், த.வெ.க.,வில் கடத்துார் நகர பொறுப்பாள-ராக பதவி வகித்து வருகிறார். இவரது உறவினரின், 16 வயது-டைய மாணவி இங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த, 23 அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மாணவியை, சுதாகர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால், சுதாகர் அங்கிருந்து தப்பியுள்ளார்.இது குறித்து மாணவியின் புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று சுதாகரை போக்சோ சட்டத்தில் கைது செய்-தனர்.
12-Feb-2025