உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்பென்னாகரம்:பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட், மூலதன மானிய நிதி திட்டத்தில், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கடைகளுடன் கட்டப்பட்டு, கடந்த, 6 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு, 61 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கான ஏலம் மார்ச், 20ல் நடக்க உள்ளது. ஒரு கடைக்கு முன்வைப்பு தொகை, 6 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்வோர் முன் வைப்புத்தொகை செலுத்திய குறிப்பிட்ட கடைகளை மட்டுமே ஏலத்தில் கூற வேண்டுமென அறிவிப்பில் வெளியாகி உள்ளது. இந்த ஏலத்தில் முறைகேடு நடப்பதாக கூறி, மா.கம்யூ., கட்சியினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமையில், பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி