உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குரூப் -1 தேர்வில் 2,057 பேர் ஆப்சென்ட்

குரூப் -1 தேர்வில் 2,057 பேர் ஆப்சென்ட்

தர்மபுரி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட, 'குரூப் -1' பதவிகளுக்கான போட்டி தேர்வை, தர்மபுரி மாவட்-டத்தில், 6,257 பேர் எழுதினர்.தர்மபுரி மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் -1' தேர்வு எழுத, 8,314 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாவட்-டத்தில், 25 மையங்களில் தேர்வுகள் நடந்தன. இதற்காக, 25 கண்காணிப்பு அலுவலர்கள், 5 மொபைல் யூனிட்டுகள், ஒரு பறக்கும் படை குழு நியமிக்கப்பட்டது. மேலும், போலீசார் பாது-காப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டத்தில், தேர்வு நடந்த அனைத்து மையங்களிலும், பஸ்கள் நின்று செல்லும் வகையில், பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று நடந்த தேர்வை, 6,257 தேர்வர்கள் எழுதினர். இதில், 2,057 பேர் தேர்-வெழுத வரவில்லை. அதியமான்கோட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். நல்லம்பள்ளி தாசில்தார் பார்வதி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ