உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் தேவை

சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் தேவை

சுகாதார நிலையத்துக்குசுற்றுச்சுவர் தேவை அரூர், செப். 15-தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்.,ல், சங்கிலிவாடி, கீழானுார், செல்லம்பட்டி, கோணம்பட்டி, செல்லம்பட்டி புதுார், கொத்தனாம்பட்டி, வாலெடுப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கிராம மக்களின் சுகாதார வசதிக்காக, செல்லம்பட்டியில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த துணை சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், செல்லம்பட்டி துணை சுகாதார நிலைய வளாகத்தில், சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு, மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில், செல்லம்பட்டி துணை சுகாதார நிலையத்துக்கு, சுற்றுச்சுவர் கட்டுவதுடன், மின் விளக்கு மற்றும் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை