கல்லுாரி மாணவி மாயம்
கல்லுாரி மாணவி மாயம்தர்மபுரி, செப். 18-தர்மபுரி அடுத்த, பழைய இண்டூரை சேர்ந்தவர் சங்கவி, 23. பாலக்கோடு அரசு கலைக்கல்லுாரியில், 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 12 அன்று, மாயமானவரை ஒகேனக்கல் போலீசார் மீட்ட நிலையில், வீட்டுக்கு வந்த பின், கடந்த, 15 அன்று மீண்டும் மாயமானார். பெற்றோர் புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.