உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / . சர்வர் பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிப்பு

. சர்வர் பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிப்பு

அரூர், அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்று டோக்கன் பெற்றவர்கள், பத்திரம் பதிவு செய்ய காத்திருந்தனர். காலை, 10:00 மணிக்கு வழக்கம் போல் பணிகள் துவங்கிய நிலையில், சிறிது நேரத்தில் சர்வர் முடங்கியது. இதனால், பத்திரப் பதிவுக்கு வந்தவர்கள் அவதியடைந்தனர். தினமும், 40 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படும் நிலையில், சர்வர் பிரச்னையால் குறைந்த எண்ணிக்கையில் பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக பத்திரப்பதிவுக்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சர்வர் பிரச்னையால் பத்திர பதிவு பாதிக்கப்பட்டது.கடந்த செப்., 29, 30 ஆகிய நாட்களிலும் சர்வர் பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு வர வேண்டிய வருமானத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்களும் திரும்ப, திரும்ப அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்கிறது. எனவே, சர்வர் பிரச்னைக்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பத்திர பதிவுக்கு வந்திருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி