மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்திலுள்ள துர்க்கையம்மன் சன்னதியில், ஆனி மாத லட்சார்ச்சனை மற்றும் தேர்த்திருவிழா, 10 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு, 33-வது ஆண்டு லட்சார்ச்சனை தேர்த்திருவிழா கடந்த, 18ல் துவங்கியது.அன்று காலை பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். ஊர்வலமாக கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு பால் அபிஷேகம், வழிபாடு நடந்தது. நாள்தோறும் காலை, மாலை மற்றும் இரவு என, 3 வேளைகளிலும், அம்மனுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, துர்க்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், துர்க்கையம்மன் கோவில் வளாகத்திலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு துர்க்கையம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago