உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மீட்பின்போது கார் மோதி இரண்டு வாலிபர்கள் பலி

மீட்பின்போது கார் மோதி இரண்டு வாலிபர்கள் பலி

மகேந்திரமங்கலம் : கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது நம்சி, 24, பெங்களூரில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த முகமது பின்சாத், 24, பெங்களூருவில் ரேடியோலஜி படித்தார். இவர்களின் நண்பர்கள் அன்சர், ரஷீத் ஆகிய நான்கு பேரும், இரண்டு 'பஜாஜ் பல்சர்' பைக்குகளில், பெங்களூரில் இருந்து, கேரளாவுக்கு பெங்களூரு- - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர்.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே, பெரியதப்பை நெடுஞ்சாலையில் வந்தபோது அன்சர், ரஷித் ஆகியோர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். அவர்களை மற்ற இருவரும் மீட்க முயன்றனர். அதற்காக, அவர்கள் ஓட்டி வந்த பைக்கை, சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சாலை நடுவே ஓடி வந்தனர்.அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த, 'டொயோட்டா பார்ச்சுனர்' கார் மோதியதில், முகமது நம்சி, முகமது பின்சாத் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கீழே விழுந்ததில் காயமடைந்த அன்சர், ரஷித் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.மகேந்திரமங்கலம் போலீசார், இருவரின் உடல்களை மீட்டு விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை