உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர்களுக்கான சூழல் உலா -குளிர்கால இயற்கை முகாம்

மாணவர்களுக்கான சூழல் உலா -குளிர்கால இயற்கை முகாம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், வனத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து, ஒகேனக்கல் பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான முகாமை நடத்தியது.இது மாணவர்களிடம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்து-வத்தை விளக்கும் கூட்டிணைப்பு திட்டமாகும். முதலை மறுசீர-மைப்பு மையம், ஒகேனக்கல் வண்ண மீன் அருங்காட்சியகத்-திற்கு மாணவர்கள் சென்று, உள்ளூர் உயிரினங்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து அறிந்தனர். மேலும், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்-பான கருத்தரங்கு, வினாடி வினா போட்டி மற்றும் சுற்றுச்சூழல் குறித்த திரைப்பட காட்சிகள் நடத்தப்பட்டன. டி.ஆர்.ஓ., கவிதா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, வனச்சரக அலுவலர் ஆலயமணி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்-பாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளி மாணவர்களுக்கான காலநிலை மாற்ற விழிப்புணர்வு சூழல் உலா, -குளிர்கால இயற்கை முகாம் வாகனத்தை, கலெக்டர் சதீஸ் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை