உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அந்தியூரில் களை கட்டிய குதிரை, மாட்டு சந்தை

அந்தியூரில் களை கட்டிய குதிரை, மாட்டு சந்தை

அந்தியூர்: அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் திருவி-ழாவை முன்னிட்டு, குதிரை சந்தை, மாட்டு சந்தையில், உயர்ரக குதிரை மற்றும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்-ளன.அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் குருநாத சுவாமி கோவில் உள்ளது. தேர்த்திருவிழா, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கி பண்டிகையின் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்க-ணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு நடைபெறும் குதிரை சந்தையில், மதுரை, திருச்சி, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, நாமக்கல் உட்பட பல்-வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான உரிமையாளர்கள் குதிரை-களை விற்பனைக்கும், கண்காட்சிக்கும் கொண்டு வந்துள்ளனர். தண்ணீர் பந்தலில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில், கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சந்தையில், குதிரைகளை நிறுத்துவதற்கு என தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, விற்-பனை மற்றும் கண்காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மார்வார், கத்தியவார் உயர் ரக குதி-ரைகளையும், நாட்டு குதிரை, போனி குதிரை, மட்டை குதிரை-களும் வந்துள்ளன. இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து, 10 லட்சம் வரை விலை கூறப்படுகின்றன. இதேபோல், காங்கேயம் இன மாடுகள், பர்கூர் மலை மறை மாடுகள், கர்நாடக நாட்டின மாடுகளும், ஜெர்சி உள்ளிட்ட ஆயி-ரக்கணக்கிலான மாடுகளும் விற்பனைக்காகவும், கண்காட்சிக்கா-கவும் கொண்டு வரப்பட்டுள்ளன. காங்கேயம் இன மாடுகள் ஜோடி இரண்டு லட்சம் ரூபாய் வரையிலும், மறை மாடுகள் 1.75 லட்சம் ரூபாயிலும் விற்கப்பட்-டது. ஆந்திரா ஓங்கோல் ஜோடி மாடுகள், 10 லட்சம் ரூபாய் வரையிலும், மைசூர் அலிகார் இன மாடுகள் ஜோடி மூன்று லட்சம் ரூபாய் வரையும் விலை கூறுகின்றனர்.காது நீளமான ஜமுனாபாரி ஆடு, எட்டயபுரம் பொட்டுக்குட்டி இன மாடு, 90 அங்குலம் உயரம் மட்டுமே வளரும் 'மின்பின்' வகை நாய், வேட்டை நாய்களும் விற்பனைக்கு கொண்டு வரப்-பட்டுள்ளன. இதுதவிர, இசைக்கேற்ற நடனமாடும் குதிரைக-ளையும் வளர்ப்பாளர் கொண்டு வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை