உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மொரப்பூர், செப். 8-தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த மணியம்பாடி பஞ்.,க்கு உட்பட்ட ஆலமரத்துப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு கர்த்தான்குளத்தில் உள்ள புனித குளத்தில் இருந்து சுவாமி வேடமணிந்து, சிலம்பாட்டம், மயிலாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் பெண்கள் தீர்த்தக்குடத்துடன் ஊர்வலமாக வந்தனர். மதியம் முலைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. இன்று, விழாவின் முக்கிய நிகழ்வான கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !