உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோவில் பால் குட ஊர்வலம்

ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோவில் பால் குட ஊர்வலம்

தர்மபுரி: ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோவில், 40 ஆண்டு திருவிழாவையொட்டி, பால் குட ஊர்வலம் நேற்று நடந்தது. தர்மபுரி அடுத்த, நெல்லிநகரில் ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 40ம் ஆண்டு திருவிழா கடந்த, 18 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சுவாமி திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று ஓம் சக்தி மாரியம்மனுக்கு பெண்கள் பங்கேற்ற பால் குட ஊர்வலம் நடந்தது.முன்னதாக, அம்மனுக்கு விபூதி, மஞ்சள், குங்கும அபிஷேகம் நடந்தது. பால்குட ஊர்வலத்தின் போது, பெண்கள் அலகு குத்தி, கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ