உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் முகாம்

தர்மபுரியில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் முகாம்

தர்மபுரி: தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்று போக்கால் ஏற்படும் இறப்பை தடுக்க, வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தர்மபுரியில் நேற்று முதல் அடுத்த மாதம், 31 வரை , 2 மாதம் முகாம் நடக்கிறது. இதில், தர்மபுரி மாவட்டம் முழுவதுமுள்ள, 1.36 லட்சம் குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., எனப்படும் உப்பு, சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் மற்றும், 14 துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளன. 6 மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தாய்பால் மட்டுமே கொடுப்பதன் அவசியத்தை பற்றியும், ஓ.ஆர்.எஸ்., கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நல்லம்பள்ளி அருகே அவ்வை நகர் அங்கன்வாடி மையத்தில் நடந்த, ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கும் முகாமை, கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார். இதில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, நல்லம்பள்ளி வட்டார மருத்துவர் வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை