மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
13 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
13 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
13 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
தர்மபுரி: தர்மபுரியில், தருமம் அறக்கட்டளையினர், பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் முதுகம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம், 43, கடந்த, 3 மாதமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். குடும்ப வறுமையால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் குடும்பத்தினர் தவித்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் சண்முகம் இறந்தார். அவருக்கு, ராதிகா, 33 என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 11 மற்றும் 9 வயதில், 2 மகள்களும் உள்ளனர். வறுமையில் தவித்த இவர்கள், தருமம் அறைக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து உதவி கேட்டனர். அவர்கள், முதுக்கம்பட்டியிலுள்ள சண்முகத்தின் வீட்டுக்கு சென்று, முதற்கட்டமாக, 10,000 ரொக்கமும், 3,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களையும் வழங்கினர். மேலும், அரசு பள்ளியில் படிக்கும், சண்முகத்தின், 3 குழந்தைகளின் ஐந்தாண்டு கல்வி படிப்பு செலவை, அவர்களே ஏற்பதாக உறுதியளித்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
01-Oct-2025