| ADDED : ஜூலை 17, 2024 02:41 AM
பாப்பிரெட்டிப்பட்டி;கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில் பழமையான சோமேஸ்வரர் உடனுறை சோமசுந்தரி கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், 45, உள்ளார். நேற்று காலை வழக்கம் போல பூஜைக்கு கோவிலை திறந்தார். அப்போது, கோவிலுக்குள் வைத்திருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்படாமல், பின் பகுதியில் ஓட்டை போட்டு உண்டியல் பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பாப்பிரெட்டிப்பட்டி ஹிந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் மணிகண்டன், கோவிலில் ஆய்வு செய்தார். புகார் படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்தாண்டு இதே மாதத்தில், உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.