உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குளித்தலை அருகே டூவீலர்கள் மோதலில் இரண்டு பேர் பலி

குளித்தலை அருகே டூவீலர்கள் மோதலில் இரண்டு பேர் பலி

குளித்தலை: குளித்தலை அருகே டூவீலர்கள் நேருக்குநேர் மோதிக் கொண்-டதில், இரண்டு பேர் பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.கரூர் மாவட்டம் தொண்டமாங்கினம் பஞ்., கடன் வாங்கியூரை சேர்ந்த ராஜலிங்கம் மகன் கோபி, 23; கொத்தனார். அதே பகு-தியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மோகன், 18; இருவரும் மது வாங்குவதற்காக டூவீலரில், கொசூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மாலை சென்றனர். மது வாங்கிக்கொண்டு, தோகைமலை -- பாளையம் மெயின் ரோட்டில் சென்றனர். அதே ரோட்டில் எதிரே, கடவூர், கீரனுார் பஞ்., அணைக்கரைப்பட்-டியை சேர்ந்த ரங்கன், 40, டூவீலரில் வந்தார். இரு டூவீலர்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதிக் கொண்டன.இதில் சம்பவ இடத்தில் கோபி பலியானார். பலத்த காயம-டைந்த ரங்கன், கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மோகன் படுகாயத்துடன், மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தோகமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.விபத்தில் பலியான ரங்கனுக்கு, இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கோபி திருமணம் ஆகாதவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை