உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு எஸ்.பி., ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு எஸ்.பி., ஆலோசனை கூட்டம்

தர்மபுரி: விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள், தொடர்ந்து நடக்கவுள்ள விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டத்தி-லுள்ள ஹிந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. சிலையை ஊர்வலமாக கொண்டு செல்வது மற்றும் நீர்நி-லைகளில் கரைப்பது போன்றவற்றிற்கு, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, சிலை வைக்க திட்ட-மிட்டுள்ள ஏற்பாட்டாளர்கள், அந்தந்த ஆர்.டி.ஓ.,விடம் அதற்-கான படிவத்தை பூர்த்தி செய்து, முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும் என, விழா ஏற்பாட்டாளருக்கு எஸ்.பி., அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி