10 அரசு டவுன் பஸ் வழித்தடம் நீட்டிப்பு
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று முன்தினம் இரவு, அமைச்சர் பன்னீர் செல்வம் வந்தார். தொடர்ந்து, நேற்று காலை, தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில் நடந்த விழாவில், 10 அரசு டவுன் பஸ்களின் வழித்தடத்தை நீட்டிப்பு செய்து, பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம், 76 கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில், கலெக்டர் சதீஸ், எம்.பி., மணி, எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், நகராட்சி சேர்மன் லட்சுமி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.