மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு
2 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று நடந்த இரண்டாம் நிலை காவலர்கான எழுத்து தேர்வில், 1,027 பேர் 'ஆப்சென்ட்' ஆனார்கள்.தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதில், எழுத்து தேர்வுக்கு வந்த தேர்வர்கள் காலை, 8:00 மணி முதல் தேர்வு மையத்தில் முறையாக சோதனை செய்த பின், மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.தேர்விற்கு வரும் தேர்வாளர்கள் மொபைல், புளூடூத், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாவி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர அனுமதிக்கபடவில்லை. தர்மபுரி மாவட்டத்தில், 7 தேர்வு மையங்களில் தேர்வு மையங்களில் நடந்த தேர்விற்கு, 9,559 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1,027 பேர், 'ஆப்சென்ட்'ஆன நிலையில், 8,532 பேர் தேர்வு எழுதினர்.
2 hour(s) ago