உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 11 மொபைல்கள் மீட்பு உரியவரிடம் ஒப்படைப்பு

11 மொபைல்கள் மீட்பு உரியவரிடம் ஒப்படைப்பு

ஊத்தங்கரை, ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில், பலர் தங்களது மொபைல்போன்கள் தொலைந்ததாக புகார் அளித்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் விசாரணை செய்தனர். அதில், தொலைந்த போன்கள் இரண்டாம் தரமாக விற்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் உரிய விசாரணை நடத்தி, ஒரு மாதத்திற்குள், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான 11மொபைல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., மோகன், போலீஸ் வெங்கடாசலம் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ