மது விற்ற 2 பேர் கைது
தர்மபுரி: காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆனந்தகுமார் நேற்று முன்தினம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து சென்றார். அப்போது, சீகலஹள்ளியில் மது விற்ற கணேசன், 38 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த, 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல், தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது, சிவாடியில் மது விற்ற ரவிசங்கர், 55 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.